சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் |
தெலுங்கில் சீதாராமன் மற்றும் ஹிந்தியில் சுப் என துல்கர் சல்மான் நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில், தற்போது தனது அடுத்த படமான கிங் ஆப் கோதா என்ற படத்தில் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படத்தை துல்கர் சல்மானின் நண்பர் அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி பகுதியில் தொடங்கியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஷான் ரகுமான் இசையமைக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இப்படம் பல மொழிகளில் டப் செய்து வெளியாக உள்ளது.