ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! |

ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. சில தியேட்டர்களை தீவிரவாதிகளிள் தாக்கி அழித்தனர். மீண்டும் அங்கு தியேட்டர் திறக்க நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு லால் சவுக் பகுதியில் ஒரு தியேட்டர் திறக்கபட்டடது அதனை தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினார். அதனால் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற தியேட்டர் செயின் நிறுவனமான ஐநாக்ஸ் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 5 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கை அமைத்துள்ளது. இவற்றில் ஒரே நேரதில் 522 பேர் படம் பார்க்கலாம். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.




