2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபல கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே. தமிழில் வினய் நடித்த 'மிரட்டல்' படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது கன்னடத்தில் மண்டலா, தசரா படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷர்மிளா மந்த்ரே ஒரு தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் விமல் நடித்த 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி, தினேஷின் நானும் சிங்கிள்தான் ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார். தற்போது பாலாஜி மோகன் இயக்கும் 'காதல் கொஞ்சம் தூக்கலா' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் அமலா பால், காளிதாஸ், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி ஷர்மிளா மந்த்ரே கூறியதாவது: இதன் கதைதான் என் கவனத்தை இழுத்தது. நாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களும் த்ரில்லராகவே இருந்தன. அதனால் ரொமான்ஸ் காமெடி கதையை பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தோம். கதை புதிதாக இருந்தது. அதனால் உடனடியாக படத்தை ஆரம்பித்துவிட்டோம். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை லண்டனில் தொடங்கி இருக்கிறோம் என்றார். இவர் தயாரித்த சண்டக்காரி படம் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.