'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டோலிவுட் ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடிக்கும் படம் 'காட்பாதர்'. மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தின் ரீமேக். இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவும், பிருத்விராஜ் நடித்த சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் நடிக்கிறார்கள். நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார், மோகன்ராஜா இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் இடம்பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடனம் ஆடியிருக்கிறார்கள். பிரபு தேவா உடன் ஆடியிருப்பதுடன் நடன இயக்கமும் செய்திருக்கிறார். ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை ஆனந்த ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.
'காட்பாதர்' திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 5ம் தேதி தசரா திருவிழா நாளில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.