திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் |
அசுரன் படத்திற்கு பிறகு வெற்றி மாறன் இயக்கி வரும் படம் விடுதலை. விஜய்சேதுபதி, சூரி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார், ஆர்.எஸ்.இன்போடெயின்ட் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி தயாரிக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. கடைசியாக கொடைக்கானலில் நடந்து வந்தது. இத்துடன் முதல் பாகத்துக்கான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக தெரிகிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.