‛அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் | ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை! களமிறங்கிய பீட்டா இந்தியா!! | ரஜினியின் ‛வேட்டையன்' ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு | ''என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்'': நெப்போலியன் மகன் வீடியோ வெளியீடு | ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம் | டைட்டிலை கைப்பற்ற போராடும் ‛கேம் சேஞ்சர்' தயாரிப்பாளர் | விஜய் 69வது படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா? | "பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்": அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | நாளை வெளியாகும் 'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல்! | மகேஷ் பாபு - ராஜமவுலி பட படப்பிடிப்பு எப்போது? |
கன்னட திரையுலகிலிருந்து கேஜிஎப், 777 சார்லி, விக்ராந்த் ரோணா என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்தது. ஒரு காலத்தில் சிறுமுதலீட்டு படங்களையும், சிறு வியாபார தளத்தை கொண்ட கன்னட சினிமா இந்த படங்களின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
இப்போது இந்த படங்களில் வரிசையில் அடுத்து உருவாகிறது கப்ஜா என்ற படம். கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. கேஜிஎப் பாணியில் கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ஆர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார்.
உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ்ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஜெ.ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கேஜிஎப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளை ரவிவர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர்.சந்துரு இயக்கி உள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது: 1947ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். இந்த படத்திற்கு 'தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா' எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச் சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். என்றார்.