சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சமீபகாலமாக வில்லன் கேரக்டர்களில் நடித்து வரும் வினய் ராய் தற்போது மர்டர் லைவ் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எம்.ஏ.முருகேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வினய் ராய் ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடிக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ வில்லியாக நடிக்கிறார். பிரசாந்த் டி.மிஸாலே ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைக்கிறர்.
படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறியதாவது: ஹாலிவுட்டில் வெளியான க்ப்ளைன்ட் டேட்க், க்ஸ்கை ஹைக், க்டெர்மினல் எக்ஸ்போசர்க், க்கிளிட்ச்க், க்இன் தி கோல்ட் நைட்க் ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான 'டாட் காம் பார் மர்டர்' என்ற ஆங்கில படத்தை தழுவி 'மர்டர் லைவ்' எனும் இந்த திரைப்படம் தயாராகிறது.
புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும். ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் படத்தின் பரபர திரைக்கதை.
இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். ஆக்சன் காட்சிகளும், பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்களும் ரசிகர்களை வியக்க வைக்கும். என்றார்.