இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் நானே வருவேன். இப்படத்தில் அவருடன் எல்லி அவ்ரம், இந்துஜா, யோகி பாபு உட்பட பலர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் துவங்கி உள்ளன. இதனிடையே இந்த படம் சென்சாருக்கு அனுப்பட்டுள்ளது. அதில் படத்தை பார்த்த அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு வருகிற 29ம் தேதி அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இப்படம் வருகிற 29ம் தேதி தமிழகத்தில் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது.