பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

சென்னையில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மற்றும் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பும், மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படி இருவரும் ஒரே ஸ்டுடியோவில் நடித்து வந்த போதும் இதுவரை அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. என்றாலும் விரைவில் விஜய்யும், மகேஷ் பாபுவும் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய் தமிழில் நடித்துள்ள கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.