‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பிறகு கதாநாயகியாக ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர். இப்போது வரை தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் மரணமடைந்ததால் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் மீனா. அந்த துயரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த அவரை அவரது தோழிகள்தான் வெளியில் அழைத்து வந்தார்கள். சிலர் கடற்கரைக்கு மீனாவை அழைத்து சென்று புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது மீனாவின் 46 வது பிறந்த நாளை ஒட்டி அவரது தோழிகள் அவருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். சினேகாவின் சகோதரி சங்கீதா மற்றும் இன்னொரு தோழி ஒருவரும் மீனாவிற்கு சர்ப்ரைஸாக சிறிய பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனார். மீனா அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மீனாவை கவலையிலிருந்து வெளியில் கொண்டு வர இது மாதிரியான பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது தோழிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.