'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ள படம் ‛வெந்து தணிந்தது காடு'. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை(செப்., 15) ரிலீஸாக உள்ளது.
இந்த படத்திற்கு தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை, ஐகோர்ட் வழக்கு தொடரப்பட்டது. அதில் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க கவுதம் மேனன் ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து "வெந்து தணிந்தது காடு" படம் எடுக்கப்பட்டு வெளியாக உள்ளது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனால் நாளை வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் திட்டமிட்டப்படி படம் நாளை வெளியாகிறது.