ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான மற்றொரு அணியினரும் களமிறங்கினர்.
இதில் தலைவராக இயக்குனர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். செயலாளராக பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான், பொருளாளராக பாலசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத்தலைவர்களாக எஸ்ஏசியின் ரவி மரியாவும், பாக்யராஜ் அணியின் யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்ஏசியின் சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்ஏசி அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியின் பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயங்குனர் கே.பாக்யராஜ் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் உறுதி மொழியை வாசிக்க தலைவர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை ஏற்ற பிறகு அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி செந்திநாதன் வழங்கினார். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.