நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் சொப்பன சுந்தரி. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் அதாவது சொப்பன சுந்தரியாக நடிக்கிறார். 'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.
லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர்.
சொப்பன சுந்தரியின் தோற்றம் பர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளது. ”ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை சீரியசான கேரக்டர்களிலேயே அதிகமாக நடித்துள்ளார். ஆனால் அவர் எல்லா ஜார்னர்லேயும் மிளிரக்கூடியவர். அவரது இன்னொரு டைமன்ஷனை காட்டும் விதமாக அவரை முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறோம். இது அவரது கேரியரில் முக்கியனமான படமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் சார்லஸ்.
சொப்பன சுந்தரியை அறிமுகப்படுத்தியது கரகாட்டக்காரன் படம். அதில் ராமராஜன் வைத்திருக்கும் காரின் முன்னாள் உரிமையாளர் சொப்பன சுந்தரி. ஒரு காட்சியில் செந்தில் கவுண்டமணியிடம் “அண்ணே இந்த காரை சொப்பன சுந்தரி வச்சிருந்தாங்க. சொப்பன சுந்தரியை யாரு வச்சிருந்தா?” என்று கேட்பார். இந்த காமெடி காட்சி மூலம்தான் சொப்பன சுந்தரி பாப்புலர் ஆனார். அதன்பிறகு வீரசிவாஜி படத்தில் இமான் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய “சொப்பன சுந்தரி நான்தானே...” என்ற பாடல் பிரபலானமானது. சென்னை 22 படத்தின் 2ம் பாகத்தில் “சொப்பன சுந்தரி உன்னை யாரு வச்சிருந்தா…” என்ற பாடல் இடம்பெற்றது.