'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் |
உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் விஜயகுமார். அதன்பிறகு உறியடி 2ம் பாகத்தை இயக்கி நடித்தார். இதனை சூர்யா தயாரித்தார். தற்போது சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக 'அயோத்தி' படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கி உள்ளனர்.