175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கி வரும் விடுதலைப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து விஜய் சேதுபதியை வாத்தியார் என்ற ஒரு கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்த வெற்றிமாறன், ஆரம்பத்தில் குறைவான நாட்கள் கால்சீட் வாங்கி இருந்தவர், பின்னர் கூடுதல் நாட்கள் கால்சீட் வாங்கி படப்பிடிப்பு நடத்தினார். விடுதலை படத்தில் இயக்குனர்கள் கவுதம் மேனன், ராஜீவ் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வெற்றிமாறன் பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தப் படத்தில் கதையின் நாயகன் சூரி. கதாநாயகன் வாத்தியார் வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி என்று தெரிவித்துள்ளார். அதாவது படத்தின் கதை சூரி நடித்துள்ள போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தை சுற்றி இருந்தாலும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரமே பிரதானமாக இருக்கும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.