ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி திரைக்கு வந்துள்ள படம் கோப்ரா. விக்ரமுடன்  ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் ஆண்ட்ரூஸ், இர்பான் பதான்  ஆகியோரும்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்த கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சியை தற்போது நீக்கி உள்ளனர். 
இந்தப் படத்தில் கணக்கு வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும்  விக்ரமிடம் படத்தின் இரண்டாம் பாதியில் விசாரணை நடத்தப்படும். அந்த கட்சியில் விக்ரமுடன்,  ஆனந்தராஜ், மியா  ஜார்ஜ் ஆகியோரும்  நடித்திருப்பார்கள். இந்த காட்சி அப்படியே ஒரு ஆங்கில குறும்படத்தில் இருந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் தற்போது விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு  அந்த குறும்பட காட்சியையும் வெளியிட்டிருப்பவர்கள், அஜய் ஞானமுத்து சார், யாரோ ஒரு டைரக்டர்  10 வருடங்களுக்கு முன்னாடியே உங்களுடைய கோப்ரா பட சீனை திருடி இருக்கிறார்கள் என்றும் அவரைக் கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள் .
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            