கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் |
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, 'பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி' என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலில், அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை, 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், அமிதாப்பச்சன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோபி சேத் கூறியதாவது:அமிதாப், எனக்கும் என் மனைவிக்கும் கடவுளைப் போன்றவர். சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய ஸ்டார்.தன் ரசிகர்கள் மற்றும் அனைவருடனும் மிக எளிமையாக பழகுபவர். தன்னுடைய வாழ்க்கை வாயிலாக, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார். இதனால், அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றி உள்ளேன். இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. நான் வீட்டு வாசலில் சிலை வைப்பது, அமிதாப்புக்கு தெரியும். ஆனால், 'நான் இதற்கு தகுதியானவன் அல்ல' என, அவர் பணிவுடன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.