‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ஜவான். இந்த படத்தில் அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், மகனாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜவான் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. முன்னதாக ஜவான் படக்குழு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து படப்பிடிப்புக்கான வேலைகளை தொடங்கி உள்ளார்கள். இதுவரை இப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா மட்டுமே நடித்து வந்த நிலையில், சென்னையில் நடக்கப்போகும் படப்பிடிப்பில் தீபிகா படுகோனேவும் கலந்து கொள்ளப் போகிறார். இந்த படப்பிடிப்புக்காக யூனிட்டுடன் இயக்குனர் அட்லீ சென்னை வந்து இறங்கிய வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.