ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பசங்க, மெரீனா படத்துல சின்ன பசங்கள வச்ச காமெடி பண்ணின பாண்டிராஜ் இப்போது யூத்துகளை வச்ச காமெடி பண்ணப்போகிறார். படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". பசங்க படத்துல அறிமுகப்படுத்துன விமலையும், மெரினா படத்துல அறிமுகப்படுத்துன சிவகார்த்திகேயனையும் நடிக்க வச்சிருக்கார். படப்பிடிப்புல யாருக்கு முக்கியத்துவம்ங்ற விஷயத்துல விமலுக்கும், சிவாவுக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்துச்சு, பாண்டிராஜ் சமாளிச்சு படத்தை முடிச்சார்னு ஒரு நியூஸ் வந்துச்சு. ஆனால் அதை பாண்டிராஜ் மறுக்கிறார்.
"ரெண்டு பேரையும் நான்தான் அறிமுகப்படுத்தினேன். ரெண்டு பேருமே இன்னிக்கு ரொம்ப பிசியான ஆளுங்க. அதை புரிஞ்சுக்கிட்டு அவர்களை பயன்படுத்தியிருக்கேன். என்னோட படத்துல நடிக்கிறப்போ இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடுங்றதெல்லாம் இல்லவே இல்லை. இருவருக்குமே அவுங்க கேரக்டர் பற்றித் தெரியும். அதனால எந்த பிரச்னையும் இல்லாம ஷூட்டிங் முடிஞ்சுது. என்னோட படத்துல 80 பிரசண்ட் காமெடி, 10 பிரசண்ட் செண்டிமெண்ட், 10 பிரசண்ட் மெசேஜ் இருக்கும். இதுலேயும் அதை மெயின்டெயின் பண்ணியிருக்கேன். திருச்சி பொன்மலை ரெயில் பேக்டரியில யாரும் நுழைய முடியாது. ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அங்க ஷூட்டிங் நடத்தியிருக்கேன். கோயம்புத்தூர், திருநெல்வேலி, சென்னைக்கு தனியான தமிழ் பாஷை இருக்கிற மாதிரி திருச்சிக்கு கிடையாது. அதனால நேட்டிவிட்டி கோட்டிவிட்டில்லாம் பார்க்க வேண்டியதில்லை. படத்துக்கு வந்தீங்கன்னா இரண்டு மணிநேரம் வயிறு வலிக்க சிரிச்சிட்டு கொஞ்சமா சிந்திச்சிட்டும் போகலாம்". என்கிறார்.