''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
அம்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர் செம்மலர் அண்ணம். முறைப்படி நடிப்பு பயிற்சி முடித்து நடிக்க வந்தவர். கோயம்புத்தூர் சொந்த ஊர். அதன்பிறகு மகளிர் மட்டும், குரங்கு பொம்மை, தம்பி, மாடத்தி, சில்லு கருப்பட்டி, பொன்மகள் வந்தாள் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் தற்போது சஷ்தி என்ற குறும்படத்தின் கதையின் நாயகியாக நடித்துள்ளார். ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு தாய்க்கும் வளர்ப்பு மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய கருத்துக்கள் எப்படி மாறுகின்றன என்பதை சொல்கிறது.
லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. இதில் தாயாக நடித்துள்ள செம்மலர் அன்னத்துக்கு சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.