செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர். ஐஸ்வர்யாவின் நெருங்கிய உறவினர். குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்தார். அவர் பாடல்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், இளைஞர்களின் உற்சாக பாடல்களாக அவை வலம் வந்து கொண்டிருக்கிறது.
தனது 10 ஆண்டு பயணத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவை மற்றும் சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் : ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட் எனும் தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை அவர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து நடத்துகிறார். கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒரு லைவ்-இன் கச்சேரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது, சென்னை நிகழ்ச்சியானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.