தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

தெலுங்கு திரையுலகின் முன்னனி நாயகனாக நானி நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ராகுல் சன்கிரித்யன் இயக்க, வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்தார். கடந்தாண்டு இறுதியில் வெளியான இப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது. இதில் நானி இரட்டை வேடத்தில் நடிக்க, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர். சிறந்த காலகட்டப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் ஆஸ்கர் கிடைக்கும் என இயக்குனர் ஆனுராக் காஷ்யப் கூறியுள்ளார். ‛ஆர்ஆர்ஆர் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைத்தால், முதல் இந்திய படமாக தேர்வாகும். 99 சதவீதம் இப்படத்திற்கு ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு' என கூறியுள்ளார்.