ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

முத்தையா இயக்கி உள்ள விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் கமிட்டாகி விட்டார். இதையடுத்து இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக சோசியல் மீடியாவில் கருத்துக்களும் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அது குறித்து ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் அதிதி ஷங்கர். அவர் கூறுகையில், ‛முத்தையா இயக்கத்தில் நான் நடித்துள்ள விருமன் பட வாய்ப்பு எனது அப்பாவினால்தான் கிடைத்தது. ஆனால் அதன்பிறகு விருமன் படத்தில் எனது நடிப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியான பிறகுதான் மாவீரன் படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். முக்கியமாக எனக்கான சினிமா கதவுகள் எனது தந்தையால் திறந்து விடப்பட்டு இருக்கலாம். ஆனால் என்னிடம் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். வாரிசு நடிகை என்ற ஒன்றை மட்டுமே வைத்து சினிமாவில் யாருமே வெற்றி பெற முடியாது' என்று ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் அதிதி ஷங்கர்.