'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த வருடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் முதல் பாகமாக வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் சேர்த்து இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மற்றும் ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய சமந்தா ஆகியோரின் நடனங்கள் மற்றும் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்த பஹத் பாசிலின் நடிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன..
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற பஹத் பாசில் இந்த படத்திலும் தொடர்கிறார். அதே சமயம் இந்த படத்தில் விஜய்சேதுபதி இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி குழுவினரின் தரப்பிலிருந்து படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடித்து வருகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து புஷ்பா-2வில் விஜய்சேதுபதி-பஹத் பாசில் கூட்டணியை காண்பதற்கு ஆவலாக இருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.