நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ஹிந்தியில் ஆலியா பட் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் டார்லிங்ஸ். இந்த படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராகவும் மாறிய ஆலியா பட் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களாகவே கடும் சர்ச்சையை சந்தித்து வந்தது. அதாவது குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் பற்றியும் அப்படி ஒரு பெண் தனது மாமியாரின் துணையுடன் தனது கணவரை கடத்தி சித்திரவதை செய்து அவருக்கு பாடம் புகட்டுவது இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காகத்தான் பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்தது. இந்நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தப்படத்தின் ஆரம்பகட்ட தயாரிப்பில் இருந்து கூடவே பயணித்ததால் இந்த படத்தின் கதை எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் அம்சங்களுடன் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதனால் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படத்தை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ற மாதிரி ஒரு சில மாற்றங்களுடன் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரீமேக் செய்து தயாரிப்பதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறது ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.