ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற படம் விக்ரம். பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் 450 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது.
சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படம் குறித்து மீண்டும் பேசியுள்ளார். இந்தப் படத்தை நடிகர் விஜய் முதல்நாளே பார்த்ததாகவும், படம் வெளியான 2 மணிநேரத்தில் தனக்கு கால் செய்த அவர் மைண்ட் ப்ளோயிங் என்று படத்தை பாராட்டியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்தும் விக்ரம் படத்தை இரண்டுமுறை பார்த்துவிட்டு போன் செய்து பாராட்டியதாகவும் லோகேஷ் கூறியுள்ளார் .
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் 67 வது படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார் .