பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

டி.ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி என்ற படத்தில் அறிமுகமானவர் அமலா. அதன்பிறகு மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்த அமலா, 1980 களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்தது வந்தவர். திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் சினிமா விட்டு விலகி இருந்த அமலா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள கணம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீ கார்த்திக் இயக்கி உள்ளார். அமலா உடன் சர்வானந்த், ரீத்து வர்மா, நாசர், எம்.எஸ் .பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கணம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கில் ஓகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் வெளியாக உள்ளது.




