இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. விக்ரம் ஏகப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. முன்னதாக இந்த படம் ஆக.,11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டப்படி பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக.,31ல் படம் வெளியாகும் என மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் வெளியிடுகிறது.




