'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையான ஆலியா பட் சில மாதங்களக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம், காதல் திருமணம் செய்து கொண்டார். ஜுன் மாதக் கடைசியில் தனது மனைவி ஆலியா கர்ப்பமாக இருப்பதாக ரன்பீர் கபூர் மருத்துவமனை ஸ்கேன் புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தாய்மை அடைந்த பிறகு தனது புகைப்படங்களை வெளியிடாத ஆலியா பட் சற்று முன்னர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான வயிறை மறைக்கும் விதமாக கொஞ்சம் லூசான ஆடை அணிந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பத்திரிகையாளர்களுடன் 'தேவா தேவா' பார்ப்பதற்காக, மற்றும் எனது லிட்டில் டார்லிங்குடன்…,” என வயிற்றில் இருக்கும் தனது குழந்தையைத்தான் லிட்டில் டார்லிங் எனக் குறிப்பிட்டுள்ளார். பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அந்தப் பதிவு பெற்றுள்ளது.
அதோடு கணவர் ரன்பீருடன் அவர் நடந்து செல்லும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.