விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்க போகிறார். இப்படத்தின் கதை பணிகளை தொடங்கி விட்டதாக சமீபத்தில் தெரிவித்த லோகேஷ் கனகராஜ், தற்காலிகமாக தான் அனைத்து சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய் 67வது படத்தின் லொகேஷன் பார்ப்பதற்கு லோகேஷ் கனகராஜ் மும்பைக்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. காரணம் இப்படம் மும்பை பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறதாம். மேலும் இதற்கு முன்பு ஏ. எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படமும் மும்பை கதைக்களத்தில் தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.