'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
மியூசிக் சேனலில் வீஜேவாக அறிமுகமான சாம் தற்போது சீரியல் நடிகராக வலம் வருகிறார். தற்போது 'அருவி' சீரியலில் ஹீரோவின் அண்ணனாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாகவே பயணித்து வரும் சாமுக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. எனினும், சமீபகாலங்களில் அவர் முக்கிய சீரியல்களில் கேரக்டரில் ரோலில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலில் சாம் என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கண்ணத்தில் முத்தமிட்டால்'. இதில், அகிலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாணக்யா திடீரென விலகி விட்டார். அவருக்கு பதிலாக சாம் தற்போது அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். சாணக்யாவிற்கு பல ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், இந்த மாற்றமானது அவர்களை வருத்தமடைய செய்துள்ளது. எனவே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சாம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.