ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசென்ஸ் கேட்டு சல்மான் விண்ணப்பித்திருந்தார்.
சல்மானின் கிரிமினல் ரெக்கார்டு, அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் உடன் சல்மான் இது குறித்து நேரிலும் பேசியுள்ளார்.
தான் வழக்கமாகப் பயன்படுத்தும் லேண்ட் குரூய்சர் காரையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக சல்மான் மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.