தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
மும்பை : 'கடுமையான துன்புறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளேன். 'பாலிவுட் மாபியா' கும்பலும், மஹாராஷ்டிரா அரசியல்வாதிகளுமே இதற்கு காரணம்' என நடிகை தனுஸ்ரீ தத்தா(38) பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
'பாலிவுட்' நடிகை தனுஸ்ரீ தத்தா 2003ல் நடந்த இந்திய அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆறாவது இடம் பெற்றார். இவர், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் தன் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் விபரம்: ‛‛நான் கடுமையான துன்புறுத்தல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளேன். தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள். கடந்த ஓராண்டாக என், 'பாலிவுட்' பட வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன.
என் வீட்டில் பணியாளாக இருந்த பெண் வாயிலாக நான் அருந்திய குடிநீரில், 'ஸ்டீராய்ட்ஸ்' உள்ளிட்ட சில மருந்துகளை கலந்து, என்னை மயக்க நிலையிலேயே சிலர் வைத்திருந்தனர். இதனால், பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானேன். இவர்களிடம் இருந்து கடந்த மே மாதம் தப்பி, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் சென்றேன். அங்கு, என் கார் 'பிரேக்' பிடிக்காமல் இரண்டு முறை விபத்தில் சிக்கினேன். இதுவும் திட்டமிட்ட சதி தான்.
அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் மும்பை திரும்பினேன். தற்போது நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும், என் வீட்டு வாசலிலும் அசாதாரண சம்பவங்கள் நிகழ்கின்றன.நான் உச்சக்கட்ட மன உளைச்சலில் உள்ளேன். இதனால் நிச்சயம் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். இங்கு இருந்தபடி என் பொது வாழ்க்கையில் முன்பை விட உயர்ந்து காட்டுவேன். 'மீடூ' விவகாரத்தில் நான் குற்றஞ்சாட்டிய பாலிவுட் பிரபலங்கள் தான் இதை செய்கின்றனர்.
பாலிவுட் மாபியா மற்றும் மஹாராஷ்டிராவின் சில அரசியல்வாதிகள் சேர்ந்து என்னை துன்புறுத்துகின்றனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2008ல் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, நடிகை தனுஸ்ரீ தத்தா 2018ல் புகார் அளித்து இருந்தார்.