பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்ன குமார் இயக்கியுள்ள படம் 'குலுகுலு' . சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன்இசையமைக்கிறார். படத்தில் ஊர் ஊராக சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். ஜூலை 29-ஆம் தேதி படம் வெளியாகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மாட்டினா காலி என தொடங்கும் இந்த பாடலை ரத்னகுமார் எழுதியுள்ளார். வித்தியாசமான வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனமும் ஆடியுள்ளார். ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.