சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் குறித்து கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசிடம் ஒரு புகார் அளித்தது. வேலையில்லா பட்டதாரி படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது என்றும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வருகிற ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.