டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் |
விஜய் டிவி பிரபலமான சிவாங்கி சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, குக் வித் கோமாளியின் மூலம் அதிக புகழடைந்தார். பாட்டு, ஆங்கரிங், காமெடி, நடிப்பு என வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணித்துக் கொண்டிருக்கும் சிவாங்கிக்கு பலரும் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு கூட்டம் அவரை விடாமல் கலாய்த்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் கூட சிவாங்கி தெறி படத்தின் சமந்தா கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட, மீம்ஸ்களை லாரியில் கொண்டு வந்து கொட்டியது போல் கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். ஆனால், வாழ்க்கையில் பாசிட்டிவிட்டியை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சிவாங்கி, விமர்சனங்களை புறந்தள்ளி அடுத்தடுத்து வெற்றிகளை ருசித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினி டிடி, ரன்பீர் கபூர் நடிக்கும் ஷம்ஷேரா படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், டிடிக்கு அடுத்தப்படியாக சிவாங்கியும் ரன்பீர் கபரூடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இத்தனை வருடங்கள் கழித்து தான் டிடிக்கே பாலிவுட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், சிவாங்கி இப்போதே டாப் கியர் போட்டு புல் ஸ்பீடில் போய்க்கொண்டிருக்கிறாரே என ரசிகர்கள் சிவாங்கியின் வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர்.