'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் சர்ச்சையான பதிவுகளால் பெரும்புயலை கிளப்பினார். ஒருக்கட்டத்தில் நண்பர்களும், ஸ்ரீநிதியின் தாயருமே ஸ்ரீநிதிக்கு மனநலம் சரியில்லை என பேட்டி கொடுத்தனர். அதன்பிறகு சிகிச்சைக்காக கவுன்சிலிங்கிற்காக ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையெல்லாம் முடிந்து வெளியே வந்துள்ள ஸ்ரீநிதி, வழக்கம் போல் இண்ஸ்டாவில் ஆக்டிவாக ஆரம்பித்துவிட்டார். அவர் தனது இண்ஸ்டாவில் 'நான் திரும்ப வந்துட்டேன்னு' சொல்லு என்ற கேப்ஷனுடன் அண்ணாமலை படத்தின் டயலாக் வீடியோவை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததற்கு சிலர் வாழ்த்துகளை கூறிவரும் நிலையில், 'ஐய்யய்யோ திரும்ப வந்துடுச்சா?' என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.




