சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் நடிகை நக்ஷத்திரா. தற்போது கலர்ஸ் தமிழின் 'வள்ளி திருமணம்' என்கிற தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் எக்ஸிக்யூட்டிவ் புரொடியசராக பணியாற்றி வரும் விஷ்வாவும் காதலித்து வரும் தகவல் அண்மையில் வெளியானது. அதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும், அப்போது மீடியாவுக்கு முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகவே நக்ஷத்திரா சைலன்டாக திருமணம் செய்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நக்ஷத்திராவுக்கு அவரது கணவர் விஷ்வாவுக்கும் திருமண வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.