ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கோபக்கார முனிவரான விஸ்வாமித்திரர் கதை பல திரைப்படங்களாக வந்துள்ளது. 1921ம் ஆண்டு காந்திலால் ரத்தோட் என்பவர் 'விஸ்வாமித்ரா மேனகா' என்ற மவுனப் படத்தை இயக்கினார். பிறகு 1952ம் ஆண்டு வங்க மொழியில் 'பானி பெர்மா' என்ற பெயரில் இதே கதை உருவானது. அதே ஆண்டு, பாபுராவ் பெயின்டர் என்பவரால் ஹிந்தியில் உருவாக்கப்பட்டது.
வி.சாந்தாராமும் இதே கதையை இரண்டு முறை படமாக்கி இருக்கிறார். தெலுங்கில் 'பிரம்மரிஷி விஸ்வாமித்ரா' என்ற பெயரில் உருவான படத்தில் என்.டி.ராமராவும் தமிழில், 'ராஜரிஷி' படத்தில் சிவாஜியும் விஸ்வாமித்ரராக நடித்திருக்கின்றனர்.
இவை அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். ஆனால் 1948ம் ஆண்டு தமிழில் உருவான 'பிரம்மரிஷி விஸ்வாமித்ரா' வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் விஸ்வாமித்ரராக நடித்தது கே.ஆர்.ராம்சிங். மேனகையாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ஜகன்னாத் இயக்கினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சரியான வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது படம் படு சீரியசாக இருப்பதாகவும், மக்கள் ரசிக்கும்படியான விஷயங்கள் படத்தில் இல்லை என்பதையும் கண்டுபிடித்தனர். இதனால் தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்ட படப் பெட்டிகளை திரும்ப கொண்டு வந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் நடிப்பில் சில காமெடி காட்சிகளை அவசர அவசரமாக படமாக்கி அதனை படத்துடன் இணைத்து மீண்டும் தியேட்டருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு படம் வெற்றி பெற்றது.