அமரன் என்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள் மதராஸி மற்றும் பராசக்தி. மதராஸி படத்தை முருகதாஸும், பராசக்தி படத்தை சுதா கொங்காராவும் இயக்குகிறார்கள். படம் வெளியாகும் முன்பே ஓடிடி வேலைகள் சூடு புடிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து, 2026 பொங்கலுக்கு வெளிவரும் படம் பராசக்தி. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விற்க படக்குழு முயற்சித்து வருகிறது. பராசக்தி படத்தின் ஓடிடி உரிமையை சுமார் 50 கோடி வரை பேரம் பேசியதாகவும் அதற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 45 கோடி வரை வாங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் படக்குழு 50 கோடிக்கு விற்கவே திட்டவட்டமாக உள்ளது. இதனால் இந்த பராசக்தி திரைப்படம் ஓடிடி உரிமை விஷயத்தில் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.