நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டப்பிங் கலைஞராக இருந்த பலர் நடிகையாக மாறியிருக்கிறார்கள். ஆனால் நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் உமா பரணி. 'நான் மகான் அல்ல' படத்தில் ரஜினிகாந்தின் மாற்றுத் திறனாளி தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர்.
'இந்திர தனுசு' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தமிழில் 'வா இந்தப் பக்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார். வீணைப்பூ, ஒரு பைங்கிளிக் கதா' போன்ற பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தாவணி கனவுகள், உச்சி வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பு வாய்ப்புகள் குறையவே டப்பிங் கலைஞராக மாறினார். பல்லவி, பானுபிரியா, சரண்யா, மோனிஷா, சித்ரா, கவுதமி, பார்வதி, இளவரசி, ரேகா, சீதா, ஸ்ரீதேவி, மாலாஸ்ரீ, கனகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தபு உள்பட 60க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.