தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
எண்பதுகளின் இறுதியில் தமிழில் வெளியான பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். மலையாள திரை உலகில் ஒரு விஜயசாந்தி என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்திலும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட வாணி விஸ்வநாத் மலையாள வில்லன் நடிகர் ஆன பாபுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் சினிமாவில் நடிக்காமல் பல வருடம் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வாணி விஸ்வநாத். அந்த வகையில் தற்போது ரைபிள் கிளப், ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இதில் ரைபிள் கிளப் படம் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஒரு மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். அதே சமயம் ஒரு அன்வேசத்தின்டே துவக்கம் படத்தில் ஒரு வில்லத்தனம் வாய்ந்த லேடி தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இது ஒரு புலனாய்வு திரில்லர் ஆக உருவாகிறது.