பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
‛ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி, இந்த பதினைந்து வருடங்களில் மிகப்பெரிய அளவில் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக கதாநாயகனுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதையின் நாயகியாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் டாப்சி, கிரிக்கெட் வீராங்கனையும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜின் வாழ்க்கை பயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள சபாஷ் மித்து என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் ஜூலை 15ல் வெளியாக உள்ளதை தொடர்ந்து அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் டாப்சி. சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வில் பேசும்போது, “கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்த நான், இந்திய கிரிக்கெட் பெண் வீராங்கனையான மிதாலி ராஜின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்தது” என்று கூறியுள்ளார். இதற்காக உடல் ரீதியாக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறியுள்ள டாப்ஸி, அடுத்ததாக அவெஞ்சர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் யாராவது இதைப்பற்றி மார்வெலிடம் சொன்னால் அவர்கள் ஏதாவது செய்யக்கூடும் என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் டாப்ஸி..