முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் | விவாகரத்து செய்த மனைவிகள் பற்றி ஒருபோதும் தவறாக பேசியது இல்லை ; நடிகர் முகேஷ் | நள்ளிரவு 12.30 மணிக்கே சலார் முதல் காட்சியை துவங்கும் கேரளா திரையரங்குகள் | 'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… | த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றம் அடையச் செய்தது. விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை படம் முழுவதும் ஒரு மாலில் நடப்பது போன்ற கதைக்குள் பொருத்தியது தவறு என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் சில தினங்களுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் பீஸ்ட் படம் தன்னை ரொம்பவே ஏமாற்றி விட்டது என்றும் படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்றும், பல காட்சிகளில் அவர்கள் லாஜிக்காக கோட்டை விட்டு விட்டனர், அதனால்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அந்தப்படம் தவறிவிட்டது என்பது போன்றும் கிண்டலாக கூறியிருந்தார்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களையும் கோபமடையச் செய்தது. இதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள ஷைன் டாம் சாக்கோ, “நான் அவ்வாறு கூறியது தவறு தான் என்பதை இப்போது உணர்கிறேன். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். காரணம் நாம் எதைப் பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ மோசமாக பேசும்போது அது அவர்களை அளவில்லாமல் நேசிக்கும் பலரையும் காயப்படுத்தும் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நண்பா” என்று கூறியுள்ளார்.