Advertisement

சிறப்புச்செய்திகள்

அந்தகன் ஆன்தம்... என் இசை அல்ல - சந்தோஷ் நாராயணன் சர்ச்சை | 'தி கோட்' பற்றி வந்த இரண்டு அப்டேட்ஸ் | ஷாரூக்கானுக்கு பிரத்யேக தங்க நாணயம் வெளியிட்ட பாரீஸ் மியுசியம் | விபத்துகளுக்கு தீர்வு காண பெப்ஸி புது முடிவு : இனி இதையெல்லாம் செய்தால் தான் படப்பிடிப்பு | மகன் ஜேசன் சஞ்சய் பிறந்தநாள் : வாழ்த்து சொல்வாரா விஜய் ? | பிளாஷ்பேக் : எளிய தமிழில் கீதோபதேசம் - கண்ணதாசனின் கவிப்புலமைக்கு சான்றான “கர்ணன்” | எப்போது அழைத்தாலும் ரெடி : பிரியதர்ஷனுக்கு மோகன்லால் கிரீன் சிக்னல் | பிளாஷ்பேக் : ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படம் ரோஜா அல்ல | சினிமா ஆன ஒரு பக்க கதை | 'அந்தகன்' படம் உருவாக பல இடர்பாடுகள் : தியாகராஜன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தி வாரியர்' மேடையில் லிங்குசாமி கண்ணீர்

08 ஜூலை, 2022 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Lingusamy-emotional-at-stage

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் படம் ‛தி வாரியர்'. ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் லிங்குசாமி பேசமுடியாமல் மேடையில் அழுதார். பிறகு அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு கண்ணீர்மல்க பேசியதாவது: இங்கே என்னை மதித்து கூடிய பல திரையுலகினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் மிகச் சில படங்கள் மட்டுமே சரியான ஆற்றலைப் பெறுகின்றன. ராம் மற்றும் டிஎஸ்பியின் எனர்ஜி லெவல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக இருந்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. நதியாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, அது தற்போது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது.

கிர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன, மேலும் அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி. ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின்னர் குடும்ப நண்பர்களாகி விட்டோம். இந்த படத்தில் ஆதி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். அடுத்த ஆண்டு 'சிறந்த வில்லன் பிரிவில்' அதிக விருதுகளை அவர் வெல்வார்.

இந்த திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன், இப்படம் அவருக்கு நல்ல லாபத்தை தரும். சண்டக்கோழி, பையா நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் வாரியர் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி, சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர்.

இவ்வாறு லிங்குசாமி பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் கிஷோர்மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் ... ஓடிடி தளங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆபத்து : தயாரிப்பாளர் எச்சரிக்கை ஓடிடி தளங்களால் சிறிய பட்ஜெட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in