இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

ஆடுகளம் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் கிஷோர். தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் கிஷோர், வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். இதை தொடர்ந்து ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛மஞ்ச குருவி'.
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி இயக்குகிறார். வேல் ஒளிப்பதிவு செய்கிறார், சவுந்தர்யன் இசை அமைக்கிறார். புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி, குங்பூ பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி கூறியதாவது: இன்றைய சமூக சூழலில் மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.




