இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

நடிகை வனிதா விஜயக்குமார் தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்சை அருமையாக ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல மெச்யூர்டாக மாறியுள்ள வனிதா சினிமா, தொழில் என பிசியாக வலம் வருகிறார். இதுநாள் வரையில் அவ்வப்போது சீரியலில் கெஸ்ட் ரோலுக்கு மட்டும் தலைக்காட்டி வந்த வனிதா தற்போது புது சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' என்கிற புதிய தொடரில் 'சகுந்தலா' என்ற கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். அவரது என்ட்ரியே செம மாஸாக உள்ளது. சீரியல்களில் மற்ற நடிகைகள் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து பேமஸ் ஆகி வருகின்றனர். வனிதாவிற்கு வில்லத்தனம் செய்வதெல்லாம் சாதரணமான விஷயம். எனவே, மாரி தொடரில் அவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரீச்சாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.