ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் விஷால், கார்த்தி இருவருக்கும் துணை நடிகர் ராஜதுரை என்பர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சி பணியில் 3 நிர்வாகிகளும் இரவு பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரான நடிகர் ராஜதுரை சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ்அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ்அப் குரல் பதிவை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.