ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி |

மாதவன் இயக்கி நடித்து வெளியாகி இருக்கும் படம் ராக்கெட்டரி. அவருக்கு ஜோடியாக ஏற்கனவே அவருடன் பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்த சிம்ரன் நடித்திருக்கிறார். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இப்படம் பாசிட்டீவான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடிகர்கள் மாதவன், சூர்யா ஆகிய இருவரும் இந்த ராக்கெட்டரி படம் குறித்து சமூக வலைதளத்தில் உரையாடினார்கள்.
அப்போது சூர்யா கூறும்போது, ராக்கெட்டரி படம் ஒட்டுமொத்த இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம் என்று கூறினார். இது போன்ற ஒரு வித்தியாசமான வாழ்க்கை வரலாறு கதையில் அனைத்து நடிகர்களுக்குமே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு தமிழர் இப்படி ஒரு சிறந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது என்று ராக்கெட்டரி படம் குறித்து அந்த உரையாடலில் கூறினார் சூர்யா. இப்படி இருவரும் ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களையும் சூர்யாவிடம் பகிந்து கொண்டார் மாதவன்.
அவர் கூறுகையில், நீங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன கஜினி மற்றும் காக்க காக்க என்ற இரண்டு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. அந்த சமயத்தில் வேறு சில படங்களில் கமிட்டாகி இருந்ததால் அந்த படங்களை ஏற்க முடியவில்லை. என்றாலும் நீங்கள் அந்த படங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தீர்கள். அதனால் தான் அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது என்றும் கடந்த காலத்தில் நடந்த சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகர் மாதவன்.