சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு |
தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில்தான் மிகவும் பிரபலமாக உள்ளார். அங்கு அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தெலுங்கில்தான் பல வித்தியாசமான படங்கள், கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2018ல் வந்த 'தியா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின் 'மாரி 2, என்ஜிகே' என தமிழில் மொத்தமாக மூன்றே படங்களில்தான் நடித்துள்ளார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள 'கார்கி' படம் தமிழில் வரும் ஜுலை 15ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் சாய் பல்லவி.